இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட ‘சந்தாயக்’ என்ற புதிய சர்வே கப்பல், ஹூக்ளி நதி நீரில் நேற்று இறக்கப்பட்டது.
இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக நான்கு மிகப் பெரிய சர்வே கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ்(ஜிஆர்எஸ்இ) ரூ.2,435 கோடி மதிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கையெழுத்தானது. இதில் முதல் கப்பலை கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த கப்பல் இன்று முதல் முறையாக ஹூக்ளி நதி நீரில் இன்று இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் கலந்து கொண்டார். அவரது மனைவி திருமதி புஷ்பா பட் இந்த கப்பலை தொடங்கி வைத்தார்.
இந்த கப்பலுக்கு கடற்படையில் ஏற்கனவே உள்ள சந்தாயக் ரக சர்வே கப்பலின் பெயர் வைக்கப்பட்டது. மற்ற 3 புதிய கப்பல்களின் கட்டுமானம் காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் கடற்படையில் ஏற்கனவே உள்ள சந்தாயக் ரக சர்வே கப்பல்களுக்கு மாற்றாக சேர்க்கப்படும்.
இந்த சர்வே கப்பல்கள் கடல் பகுதியில் கப்பல்கள் செல்லும் வழித்தடங்களில் ஆழங்களை அளவிடும் பணியில் ஈடுபடுவை என்பது குறிப்பிடத்தக்கது.

														
														
														
Leave your comments here...