தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

ஆன்மிகம்தமிழகம்

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

டிச.03 இன்று முதல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந் குறைந்து வரக்கூடிய நிலையில், டிச.01 முதல் கேரளாவுக்கு பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடமும் அவ்வாறே இயக்குவதற்கு 64 சிறப்புப் பேருந்துகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டும் நாளை 03.12.2021 முதல் 16.01.2022 வரையில், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

மேலும், 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in மற்றும் http://www.redbus.in, http://www.busindia.com, http://www.paytm.com, உட்பட இச் சிறப்புப் பேருந்துகள் ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் பேருந்துகள் விபரங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் தெரிந்து கொள்ள 9445014412, 9445014450, 9445014424, 9445014463, 9445014416 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளும் வகையில் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த சேவையினை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave your comments here...