பத்ம விருதுகள்; மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் -எஸ்.பி.சரண் பெற்றுக்கொண்டார்..!

இந்தியாசினிமா துளிகள்

பத்ம விருதுகள்; மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் -எஸ்.பி.சரண் பெற்றுக்கொண்டார்..!

பத்ம விருதுகள்; மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் -எஸ்.பி.சரண் பெற்றுக்கொண்டார்..!

2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷண், 10 பத்ம பூஷண் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாட்களில் நான்கு தொகுதிகளாக வழங்குகிறார்.எஸ்.பி.பி என ரசிகர்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இறந்தார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி தனது மெல்லிய குரலால் பல கோடி இதயங்களை வென்றவர் . மேலும் அவர் ஒரு நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவரது மகன் எஸ்.பி.சரண் பாடகரும் தயாரிப்பாளரும் ஆவார்.

கலை உலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பாடகரும் இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அறிவிக்கப்பட்டு இருந்த பத்ம பூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்று கொண்டார் .

எஸ்.பி.பாலசுப்ரமணியம் 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2011 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதுகளை பெற்று உள்ளார் இதை தவிர அரசாங்க விருதுகள் மற்றும் திரைப்படத் துறை விருதுகளுடன் கூடுதலாக ஆறு தேசிய விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

Leave your comments here...