விநாயகர் சிலை கரைக்க அமைத்த குளத்தில் முதலை – பக்தர்கள் அதிர்ச்சி

Scroll Down To Discover
Spread the love

குஜராத்தின் வதோதரா நகரில் விநாயகர் சதுர்த்தியை முனின்ட்டு வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைக்க குளம் ஒன்ற அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பொதுமக்கள் சிலைகளை கரைத்து வந்தனர்.

இந்த நிலையில், குளத்தில் இருந்து 4 அடி நீள முதலை ஒன்று வெளிவந்து உள்ளது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து வனவாழ் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்த முதலை மீட்பு குழுவால் மீட்கப்பட்டு வனதுறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குளத்திற்கு அருகே உள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து தப்பி இந்த முதலை குளத்திற்கு வந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.