ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு எமிரேட்சிஸ் தஞ்சம்

Scroll Down To Discover
Spread the love

தலிபான்கள் ஆதிக்கத்தால் நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். அண்மையில் தலைநகர் காபூல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்தனர். இதை அறிந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, தனது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன், சிறப்பு விமானம் மூலம் தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியது.

ஆனால் எங்கிருக்கிறார் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்கவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளேன்’ என, கனி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, ‘அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மனிதநேய அடிப்படையில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என, ஐக்கிய அரபு எமிரேட்சின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.