சொந்த செலவில் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய பாஜக தொண்டர்..!

Scroll Down To Discover
Spread the love

மகாராஷ்டிரா பூனாவில் உள்ள ஒரு பாஜக தொண்டர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோயிலைக் கட்டியுள்ளார். கோயிலுக்கு உள்ளே பிரதமரின் மார்பளவு உருவச்சிலை உள்ளது.

அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டிய பிரதமருக்கு தான் செலுத்தும் மரியாதை இந்த கோயில் என்று 37 வயதான மயூர் முண்டே என்ற அந்த நபர் கூறுகிறார். இந்த சிறிய கோவில் புனேவின் ஆந்த் பகுதியில் உள்ளது.

இது குறித்து கோவிலை கட்டிய மயூர் முண்டே கூறியதாவது:- பிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகு நாட்டில் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். தீர்க்க முடியாத பிரச்சினைகளை வெற்றிகரமாக கையாண்டு உள்ளார்.

குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்துக்குரிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியது, ராமர் கோவில் கட்டுவது, முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது போன்றவற்றில் வெற்றி கண்டு உள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டி வரும் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவருக்கு கோவில் கட்டுவது சரி என பட்டது.

எனவே எனது சொந்த இடத்தில், சொந்த செலவில் சிறிய அளவிலான கோவிலை கட்டி உள்ளேன். இதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவாகி உள்ளது. மோடியின் மார்பளவு சிலை மற்றும் கோவில் கட்ட தேவைப்பட்ட சிவப்பு பளிங்கு கற்கள் ஆகியவை ஜெய்பூரில் இருந்து வாங்கி வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.