உங்களுக்கு மனசாட்சி இல்லையா…? பசு மாடுகள் மீது சுடு தண்ணீர் ஊற்றும் அவலம்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கால்நடைகள் மீதான வன்முறை சம்பவம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு விஷம் வைத்துக் கொள்ளப்பட்டது, மேலும் ,பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் மீது சூடான எண்ணெய் ஆசிட் போன்ற பொருட்களை ஊற்றும் சம்பவம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ,மதுரை மாவட்ட ஆட்சியரும் கால்நடைகள் மீது வன்முறை சம்பவங்களை ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மதுரை மாநகர் விராட்டிபத்து பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த பசு மாடுகள் மீது மர்ம நபர்கள் சுடுதண்ணி ஊற்றியுள்ளனர்.

இதனால், பசுமாடுகள் உடல் முழுவதும் படுகாயங்களுடன் சுற்றிவருகிறது. இதுபோன்று, கால்நடைகள் மீது வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பசுமாடுகளுக்கு கால்நடை மருத்துவர் மூலம் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.