விருதுநகர் அருகே, மல்லாங்கிணறு பேரூராட்சியில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்றது. தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், கொரோனா 3-வது அலை வராமல் தடுக்க ஒரு வார கால நோய் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனைபடி, பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்றது. மல்லாங்கிணறில் உள்ள கடைவீதி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அவசியம் முக கவசம், கையுறை கிருமிநாசினி மருந்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நோய் பரவாமல் தடுப்பது பற்றியும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம அணிய வலியுறுத்த வேண்டும் என்று, கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், பேருராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்து தடுப்பூசி போடும் பணியினை தீவிரமாக செய்யப்பட்டது. பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும் தடுப்பூசி போடும் பணி 100 சதவீதம் முடிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று, பேருராட்சி செயல் அலுவலர் அன்பழகன் தெரிவித்தார்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...