8 சிறு கோள்களை கண்டறிந்த நவோதயா வித்யாலயா மாணவர்கள்..!

Scroll Down To Discover
Spread the love

ககோல்ஷலா சிறுகோள் ஆராய்ச்சி திட்டம் 2021-இன் கீழ் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 16 மாணவர்கள், 8 சிறு கோள்களை கண்டறிந்ததற்காக சர்வதேச வானியல் ஆராய்ச்சி கூட்டமைப்பு, ‘தற்காலிக அந்தஸ்தை’ வழங்கியுள்ளது.

ககோல்ஷலா சிறுகோள் ஆராய்ச்சி திட்டம் 2021, என்பது, சிறு கோள்களை கண்டறிவதற்கான பயிற்சிகளை ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும் திட்டமாகும். இது, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் மற்றும் விண்வெளி அமைப்பு ஆகியவற்றின் முன் முயற்சியாகும்.

ஹார்டின்-சிம்மன்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் சர்வதேச வானியல் ஆராய்ச்சி கூட்டமைப்பு, முதற்கட்ட கண்டுபிடிப்புகளை உறுதி செய்து, வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த சிறு கோள்களை ஆவணப்படுத்துவதற்கு பல ஆண்டுகளாகும் நிலையில், இவற்றின் கண்டுபிடிப்பு மற்றும் 8 சிறு கோள்களுக்கு தற்காலிக அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது இளம் மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும். இதன் மூலம் விண்வெளி அறிவியலாளர்கள், வானியலாளர்கள் மற்றும் விண்வெளி வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் இந்த மாணவர்கள் பெறுவார்கள்.