தமிழக அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

Scroll Down To Discover

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், புதிய கல்வியாண்டுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன.

6 கோடி இலவச பாடப் புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக அனுப்பப்பட்டு விட்டன. பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் புத்தகங்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கும் வகையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நாளை முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனிடையே, மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், விலையில்லா பாட புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.