அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

Scroll Down To Discover

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நினைவாக, தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ‘அப்துல் கலாம் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதைப் பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுச் சான்றிதழும், தங்கப் பதக்கமும் (8 கிராம்) வழங்கப்படும்.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்காலம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.