சீன அராஜகத்தை வெளி உலகிற்கு அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது!!

Scroll Down To Discover

உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. 105வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீகமாக கொண்ட பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலன் புலிட்சர் விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் பழங்குடி இன மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் குறித்து அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் மூலமாக இந்த செய்தி உலகம் முழுவதும் வைரலானது. இந்த அவலத்தை வெளிஉலகுக்கு கொண்டுவந்த மேகாவைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்களுக்கு சீன கம்யூனிச அரசு கட்டாய கருத்தடை செய்வதாகவும், தொழிலாளர் சட்டத்தை மீறி அவர்களிடம் அதிக வேலை வாங்குவதாகவும், மேகா ராஜகோபாலன் தனது கட்டுரையில் தொடர்ந்து எழுதி வந்தார். இதனையடுத்து விழித்துக்கொண்ட ஐநா ,இதுகுறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டது. சீனா இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தாலும் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவின் இந்த மனித உரிமை மீறலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பழங்குடி இன மக்கள் தயாரிப்பில் உருவாக்கிய கைவினை பொருட்களை வாங்க அமெரிக்கா மறுத்தது. இது சர்வதேச அளவில் அவர்களுக்கு நீதி கிடைக்க உதவியது. இஸ்லாமிய பழங்குடி அமைப்புக்கு சீனாவில் நடக்கும் அநீதிக்கு உலகறிய செய்தவர் மேகா ராஜகோபாலனுக்கு தற்போது புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.