2-வது ஆண்டாக உலக புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் யாத்திரையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

Scroll Down To Discover
Spread the love

ஒடிசாவின் புரி ஜெகநாதர் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக இந்த ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை அடுத்த மாதம் (ஜூலை) 12-ந்தேதி நடைபெறுகிறது.

ஆனால் கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒடிசாவிலும் தொற்று மிகவும் வீரியமாக உள்ளது. எனவே தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஒடிசா அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து சிறப்பு நிவாரண கமிஷனர் ஜெனா நேற்று கூறுகையில், ‘ஜெகநாதர் ரத யாத்திரையில் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதைப்போல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

ரத யாத்திரையின்போது புரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் எனக்கூறிய அவர், கடந்த ஆண்டைப்போல மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்து மகிழலாம் என தெரிவித்தார்.2 டோஸ் தடுப்பூசி போட்ட மற்றும் கொரோனா இல்லாத 500 ஊழியர்கள் மட்டுமே ரதத்தை இழுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.