தெருவில் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு உணவும் போர்வையும் வழங்கிய பெண் காவல் ஆய்வாளர் – குவியும் பாராட்டுகள்

Scroll Down To Discover

மதுரை மாநகர எஸ். எஸ். காலனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கலைவாணி. இவர் ரயில் நிலையம் நேதாஜி ரோடு, காளவாசல், மற்றும் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு உணவும் குளிரிலும் கொசுக்கடியில் படுத்து உறங்கிய ஆதரவற்ற நபர்களுக்கு தனது சொந்த செலவில் உணவும், போர்வை வழங்கினார்.

இவரது சேவையை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள் .கொரோனா தொற்று முதலாம் அலையின் போது, இவர் சுப்ரமணியபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது, கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தனது சொந்த செலவில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: Ravi Chandran