அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஃபேஸ்புக் கணக்கு இரண்டு வருடங்களுக்கு முடக்கம்.!

Scroll Down To Discover
Spread the love

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப், வன்முறையை தூண்டும் வகையில் பேசி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் கேப்பிட்டல் கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் இருந்து ட்ரம்ப்பின் அதிகாரப்பூர்வ கணக்குகள் கடந்த ஜனவரியில் முடக்கப்பட்டன.

தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் மேற்பார்வை குழு அளித்த அறிக்கையின்படி, ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த பிரச்னைகளும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு ட்ரம்ப்பின் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என்று விமர்சித்துள்ளார்.