ஈஷா மயானங்களில் கொரோனாவால் காலமானவர்களை இலவசமாக தகனம் செய்யலாம்.!

Scroll Down To Discover
Spread the love

தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக தகனம் செய்யலாம்.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “#ஈஷாமயானங்கள், கோவிட் தொற்றால் காலமானவர்களுக்கு கட்டணமின்றி தகன சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கும். இந்த உயிர் கொல்லி வைரசுக்கு அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தோருக்கு ஆதரவாய் இருக்க விரும்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவு, தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழக சுகாதாரத் துறை ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது.


ஈஷா சார்பில் கோவையில் 12 மயானங்கள், சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.