சென்னை பிஎஸ்பிபி பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர், நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

Scroll Down To Discover
Spread the love

சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீதும் அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் (வணிகவியல்) மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று கனிமொழி எம்.பி. பதிவிட்டுள்ளார்.