கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல இயக்கப்படும் ‘டாக்சி ஆம்புலன்ஸ்’ சேவை மத்திய அரசு பாராட்டு!

Scroll Down To Discover

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 18, 20ம் தேதிகளில், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கொரோனா தடுப்பு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இக்கட்டான சூழலை சமாளிக்கும் வகையில் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அந்தந்த மாநில செயலர்கள் எடுத்துரைத்தனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகத்தில், கொரோனா நோயாளிகளை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வகையில், ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய டாக்சி ஆம்புலன்சை தன்னார்வலர்கள் வடிவமைத்து உள்ளதை பாராட்டியுள்ளார். இதுபோன்ற புதுமையான, தேவையான மாற்றங்களை, மற்ற மாநிலங்களும் பின்பற்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.