அர்ஜுனா விருது வென்ற “தேஜஸ்வினி பாய்க்கு” 2-லட்சம் நிதியுதவி அளிக்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்.!

Scroll Down To Discover
Spread the love

கடந்த 2011ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதை வென்ற கர்நாடகாவின் வி தேஜஸ்வினி பாய் என்பவருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவியை அளிக்க மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (மியாஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.

இவர், கடந்த 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றிருந்தார்.

கொவிட் தொற்று காலத்தில், முன்னாள் சர்வதேச தடகள வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் உதவுவதற்காக, இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் மற்றும் மியாஸ் ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பின் கீழ், பண்டிட் தீன்தயாள் உபாத்யாய தேசிய நல நிதியிலிருந்து, நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.