ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் 55-ஆவது பிரிவைச் சேர்ந்த 21 பெண்கள் உட்பட 110 மருத்துவ மாணவர்கள், ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் மருத்துவ அதிகாரிகளாக மே 15 அன்று நியமிக்கப்பட்டனர்.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் படைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நர்தீப் நைதானி, மாணவர்களை பணியில் அமர்த்தினார். 94 மாணவர்கள் இந்திய ராணுவத்திலும், 10 பேர் இந்திய விமானப் படையிலும், 6 பேர் இந்திய கடற்படையிலும் சேர்க்கப்பட்டனர். கல்லூரியின் பயிற்சியாளர் கர்னல் ஏ கே ஷாக்யா, புதிதாக சேர்க்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு இந்திய அரசியலமைப்பின் படி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். 1982-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முதலாக கொவிட்-19 கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெறவில்லை.
https://twitter.com/PBNS_India/status/1393483231484256265?s=20
சவாலான தருணத்தில் நாடு உள்ளபோது, இந்த மாணவர்கள் மருத்துவப் பணியில் சேர்வதாக தமது உரையில் லெப்டினன்ட் ஜெனரல் நைதானி கூறினார். கொவிட் போராளிகளாக தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் இணைய உள்ள இந்த மாணவர்கள், பயிற்சியின்போது தாங்கள் பெற்ற திறன் மற்றும் அறிவை நோயாளிகளின் நலனிற்காக பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள 31 ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் உள்ளுரைவாளர்களாக உடனடியாக சேர உள்ளனர். இந்த 31 மருத்துவமனைகளும் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பிரத்தியேக கொவிட் சிகிச்சை மையங்களாகும்.
Leave your comments here...