இப்படியும் ஒரு ரேஷன் கடை ஊழியர் – பாராட்டும் பொதுமக்கள்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி ரேஷன் கடை ஊழியர் பாலமுருகன் கொரோண நிவாரண நிதியாக வழங்கப்படும் ரூபாய் 2 ஆயிரம் டோக்கனை மாஸ்க்குடன் வழங்கி குடையுடன் ரேசன் கடைக்கு வர அழைப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி கிராமத்தில் தமிழக அரசு நிவாரண நிதியாக வழங்கும் முதல் கட்ட தொகை 2000 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரேஷன் கடை ஊழியர் பாலமுருகன் தனது சொந்த செலவில் மாஸ்க் வாங்கி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டோக்கனுடன் வழங்கி வருகிறார்.

மேலும் , கரோனா 2வது அலை தொற்று இருப்பதால் மாஸ்க் அணிந்து வரவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க குடையுடன் வருமாறு வலியுறுத்தினார்.. கொரொண பரவும் நேரத்தில் ரேஷன் கடை ஊழியர் பாலமுருகன் சமூக அக்கறையுடன் செய்யும் செயல்பாடு பெரும் பாராட்டுதலுக்கு உரியது.