மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் , வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் 4 ம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக விருதுநகர் மாவட்டம் ,காரியாபட்டி வட்டார வருவாய் கிராமங்களில் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் கல்லூரணி கிராமத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் கந்தசாமி தேனீ வளர்பில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். தேனீகளின் வகைகள் மற்றும் அவற்றின் சமுதாய அமைப்பு அவர் மாணவிகளுக்கு விளக்கினார். தேனீ வளர்ப்பு குறித்த செயல் விளக்கத்தை மாணவிகள் க.பார்கவி இரா.சந்தியா,ம.சரிகா, ச.சாருலதா, ஜெ.இரா.ஷாலினி,மு.சினேகா ஆகியோர் கேட்டறிந்தனர்.மேலும் தேனீ கூட்டை பராமரிக்கும் முறை குறித்து கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து மாணவிகள் தேனின் மருத்துவ பயன்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தினர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...