ஆர்எஸ்எஸ் பொது செயலாளராக, தத்தாத்ரேயா ஹோசாபலே தேர்வு.!

Scroll Down To Discover
Spread the love

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதிகள் சபை கூட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. வழக்கமாக மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடக்கும் கூட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பெங்களூருவில் நடந்தது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது, பொது செயலாளராக சுரேஷ் பைய்யாஜி ஜோஷி உள்ளார்.கடந்த 2018 ம் ஆண்டு முதல் இந்த பதவியில் உள்ளார். அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, புதிய பொது செயலாளராக தத்தாத்ரேயா ஹோசபலே தேர்வு செய்யப்பட்டார்.

இதன் பின்னர், அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஆர்எஸ்எஸ் அமைப்பின் இலக்கு குறித்து தத்தாத்ரேயா பேசியதாவது: பசு பாதுகாப்பு, குடும்ப கவுன்சிலிங், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அநீதியை அகற்றுதல், கிராமப்புற வளர்ச்சி ஆகியவை, ஆர் எஸ் எஸ் அமைப்பின் இலக்குகளாக இருக்கும். என தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள சோரப் பகுதியில் பிறந்தவர் தான் தத்தாத்ரேயா ஹோசாபலே. இவரது பெற்றோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். தத்தாத்ரேயா, 1968 ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். இதன் பின்னர் 1972 ம் ஆண்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ஏபிவிபி) இணைந்த அவர், அந்த அமைப்பின் பொது செயலராக 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். நாட்டில் அவசர நிலை அமல்படுத்திய போது, மிசா சட்டத்தின் கீழ் தத்தாத்ரேயா ஹோசாபலே சிறையில் இருந்துள்ளார்.