புகார் அளிக்கப்பட்ட 27 நாட்களில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிமன்றம் !

Scroll Down To Discover
Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட 27 நாட்களில் விசாரணையை முடித்து நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது.


இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. புகார் அளிக்கப்பட்ட 26 நாட்களில் விசாரணையை முடித்து அந்த நபர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அடுத்த நாளான 27-வது நாள் அந்த நபருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு கொடூரமான குற்றம் என்று தெரிவித்த நீதிமன்றம் குற்றவாளி மரண தண்டனைக்கு தகுதியானவர் என கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது.