இந்துக்களின் முக்கிய விழாவான மகா சிவராத்திரி விழா இன்று (11-ந்தேதி) இரவு கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியான இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் நீண்ட வரியில் நின்று சிவபெருமானை வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மகா சிவராத்திரி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்துபிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
https://twitter.com/narendramodi/status/1369838068757262338?s=20
மகா சிவராத்திரி திருநாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த மங்களகரமான நன்னாளில் நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஹர் ஹர் மகாதேவ்! என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave your comments here...