ராணுவ வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி

Scroll Down To Discover
Spread the love

ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த வாரம் முதல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு, கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கிஉள்ளது. தடுப்பூசி பதிவிற்காக, ‘கோவின் – 2’ வலைதளத்தில், ராணுவ மருத்துவமனைகளை பதிவு செய்யும் பணி நடக்கிறது.

இப்பணி முடிவடைந்ததும், அடுத்த வாரம் முதல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான தடுப்பூசி போடும் பணி துவங்கும். தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், அடுத்த சில தினங்களில் வெளியாகும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.