அரசியல்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டியில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு
- March 6, 2021
- : 845
- TNElection2021

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ அதிகாரி ஜேக்கப் கோஷி தலைமையில் 90 துணை ராணுவ படை வீரர்கள் வருகை புரிந்துள்ளனர்,
சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன், உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜன், சுரேஷ் தலைமையிலான காவல்த்துறை அதிகாரிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் துவங்கி உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Leave your comments here...