குரங்கிடம் இருந்து தப்பிக்க சிலைபோல் நடித்த சிறுவன் – காரியாபட்டி அருகே ருசிகர சம்பவம் .!

Scroll Down To Discover

குரங்கிடமிருந்து தப்பிக்கஅசையாமல் சிலை போல நின்று நடித்த சிறுவனின் ருசிகர சம்பவம் நடந்தது . விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது எஸ்.மறைக்குளம் கிராமம்.

கடந்த சில நாட்களாக குரங்கு ஒன்று ஊரில் சுற்றிக் கொண்டு தெருவில் நடந்து செல் பவர்களை அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டிருந்தது. அத்தோடு கிராமத்தில் தெரு நாய்களுடன் சண்டை போட்டுக் கொண்டு சுற்றி திரிந்தது. நேற்று முன்தினம் வழக்கம் போல, சிறுவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது குரங்கு பள்ளி வளாகத்திற்குள் வந்ததை கண்டதும் சிறுவர்கள் ஓடிஒளித்து கொண்டனர் அப்போது இதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் பரத் என்பவன் மட்டும் தனியாக (வயது-10 ) பள்ளி சுவரில் ஏறி நிற்கும் போது அந்தகுரங்கும் சுவரில் ஏறி சிறுவன் அருகில் வந்து நின்றது. குரங்கு அருகில் நின்றதை பார்த்த சிறுவன் பரத் அசையாமல் சிலை போல அமர்ந்திருந்தான் இதை பார்த்த சிறுவர்கள் டேய் கிழே இறங்கி ஒடுடா குரங்கு கடிக்கும்என்று சொல்லவும் சிறுவன் அசையாமல் சிலை போல இருக்க குரங்கு சிறுவனிடம் சேட்டை செய்யாமல் , அவனை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடியது.

சில நிமிடம் கழித்து குரங்கு கீழே ஓடி விட்டது. இச்சம்பவத்தை கீழே வேடிக்கை பார்த்த மற்றொரு சிறுவன் தனது செல்போனில் படம் எடுத்துள்ளான். குரங்கிடமிருந்து தப்பிக்க சமயோகிதமாக செயல்பட்ட சிறுவன் பரத்தின் நடவடிக்கைகள் எல்லோரும் பாராட்டினார்கள்.

செய்தி: Ravi Chandran