திருப்பரங்குன்றம் சொர்ண வராகி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மண்டேலா நகர் பகுதியில் ஸ்ரீ சொர்ண வராகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் மூன்று நாள் சிறப்பு யாக நிகழ்வுக்குப் பின் மகா கும்பாபிஷேகம் சொர்ண வராகி அம்மனுக்கு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை பிரசாத விநியோகம் நடைபெற்றது.

பஞ்சமி குடில் சார்பில் அமைக்கப்பட்ட ஸ்ரீ சொர்ண வராகி அம்மன் திருக்கோவில் மதுரை மாவட்டத்திலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரிங்ரோடு மண்டல நகர் பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதிகள் உள்ளதாகவும் கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

பஞ்சமி திதியன்று வராகி அம்மனை வழிபட்டால் மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் பில்லி சூனியம் மற்றும் கவலைகள் நீங்கும் என கூறுகின்றனர் இந்நிழ்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.