ரூபாய் 70.28 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால்கள் மற்றும் அமெரிக்க டாலர்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் – ஒருவர் கைது

Scroll Down To Discover
Spread the love

துபாய் செல்லவிருந்த 6இ-65 இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக சென்று கொண்டிருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நூர் முகம்மது சுல்தான், 60, என்பவர் வெளிநாட்டு பணம் கடத்துவதாக கிடைத்த உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அந்த நபர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

படபடப்புடன் அவர் காணப்பட்டதால் அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர். அப்போது அவரது கால் சட்டை பையிலிருந்து ரூபாய் 1.45 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.


விமானத்திற்கு அனுப்பப்பட்ட அவரது பை திரும்ப பெறப்பட்டது அதை திறந்து பார்த்த போது, ரூபாய் 68.83 லட்சம் மதிப்பிலான சவுதி அரேபிய ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூபாய் 70.28 லட்சம் வெளிநாட்டு பணம் சுங்க சட்டத்தின் ஃபெமா (பண ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) விதிகளின்படி பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்