மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் சமூக மாற்றத்திற்கான மையம் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரங்கில் நடைபெற்றது.
இதில் உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் கல்வி மாவட்டங்களில் இருந்து 2018-19 ல் மேனிலை இரண்டாமாண்டில் நூறு சதம் தேர்ச்சி்பெற்ற 63 பள்ளிகளுக்கு விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதில், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

63 பள்ளிகளின் தலைமையாசிரியர்களூம் அவர்களோடு ஒரு ஆசிரியரும் இவ்விழாவில் கலந்துகொண்டார்கள்…திருமங்கலம் மாவட்டக் கல்வி அலுவலர் இந்திராணி, உசிலம்பட்டி கல்வி மாவட்டக் கல்வி அலுவலர முத்தையா இவ்விழாவிற்கு வந்து சிறப்பு செய்தார்கள். ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் முனைவர் ஆர்.இலட்சுமிபதி, சீ.தீனதயாளன், ஆர்.சுதா, எம் தங்கராஜ், எஸ். நாகரத்தினம், ஏ.மேசாக் பொன்ராஜ், எம். ஜெயலட்சுமி மற்றும் பதிவாளர் முனைவர் வி.எஸ்.வசந்தா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை, சமுக மாற்றத்திற்கான மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கொ.சதாசிவம் வரவேற்றார். சுற்றுச்சூழல் அறிவியல்துறைத் தலைவர் முனைவர் எஸ்.கணணன் நன்றியுரை சொன்னார். சமூகவியல் உதவிப்பேராசிரியர் முனைவர் பா.கீதா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

														
														
														
Leave your comments here...