28வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய முதியவர்.!

Scroll Down To Discover
Spread the love

துாத்துக்குடி ஆலங்குளத்தை சேர்ந்த யாசகர் பூல் பாண்டியன். இவர் பிச்சை எடுத்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பிச்சை எடுத்த தொகையில் உணவு செலவு போக மீதமுள்ளதை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 27 முறை தலா ரூ.10 ஆயிரம் வீதம் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார். இதற்காக சுதந்திர தின விழா பாராட்டு சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அவர் 28 வது முறையாக ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார். இதுவரை அவர் 2.80 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். அவர் கூறுகையில்,”மதுரையில் இருக்கும் வரை தொடர்ந்து வழங்குவேன்,” என்றார்.