மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “தமாக அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது, அதிமுக கூட்டணி வெற்றி மிக பிரகாசமாக உள்ளது.
தமிழகத்தில் அதிக அளவிலான வளர்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளது, வளர்ச்சி பணிகளை எதிர்கட்சிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை, இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் அவசியம், அவசரம், மீனவர்கள் பிரச்சினைகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ஒரு சிலரின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது, விவசாயிகள் தவறான வழியில் கொண்டு செல்லப்படுகிறார்கள்.
பெட்ரொல், டீசல், கேஸ் விலை உயர்வை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும், எதிர்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும், அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து சமூகமாக பேசுவோம், அதிமுகவில் இருந்து அதிகார பூர்வ அழைப்பு வரும் போது பேசுவோம், யார் வெளியே வந்தாலும் அதிமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது, சந்தர்ப்பங்களுக்காக வேலை கையில் எடுப்பவர்களுக்கு வேல் கை கொடுக்காது, தாமாகவினர் தொடக்கத்தில் இருந்தே வேலை கையில் எடுத்து வருகிறோம்” என கூறினார்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...