சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 7 பேர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் ஸ்ரீமாரியம்மன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கரமான வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 8 பேரும், மருத்துவமனையில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயம்பட்ட 36 பேரை சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனில்லாமல் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. இந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாராயணன் என்பவர் சிகிச்சை பலனலிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிவகாசி அரசு மருத்துவமனையில் 2 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் 20 பேரும், சாத்தூர் அரசு மருத்துவமனையில் 9 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது