வேளாண்மைத்துறை சார்பில் அங்கக வேளாண்மை கண்காட்சி.!

Scroll Down To Discover
Spread the love

இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மற்றும் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கக வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன் தலைமையில் வேளாண் அதிகாரிகள் பலர் பங்கேற்று விவசாயிகளுக்கு இயற்கை முறை விவசாயம் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும் , மண்ணின் தரம் மற்றும் பயன்படுத்தும் உரங்களின் பயண்பாடு மற்றும் மண்புழு வளர்த்தல் மற்றும் இயற்கை முறையில் விவசாயம் செய்த பழ வகைகள், காய்கறிகள் மற்றும் பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளின் பார்வைக்காக கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கலந்துகொண்டனர்.

செய்தி: Ravi Chandran