வீர மரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்ட ராணுவ வீரர் பழனிக்கு அலகாபாத் ராணுவ மையத்தில் வெண்கல சிலை .!

Scroll Down To Discover
Spread the love

இந்திய எல்லையான லடாக் பகுதி கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ல் சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலுார் ராணுவ ஹவில்தார் பழனி 40, வீர மரணம் அடைந்தார்.

குடியரசு தின விழாவை யொட்டி நாட்டிற்காக வீர மரணம் அடைந்த பழனிக்கு ராணுவத்தின் மூன்று உயரிய விருதுகளில் ஒன்றான ‘வீர் சக்ரா’ அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் பழனி அலகாபாத் ராணுவ மையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றியவர் என்பதால், இங்குள்ள ராணுவ மையத்தில் ஒரு கட்டடத்திற்கு ‘ஹவில்தார் வீர் கே.பழனி அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் உள் நுழைவுப் பகுதியில் அரையளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பழனி சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் மட்டுமின்றி பீரங்கி இயக்குவதில் வல்லவர். அவர் லடாக்கில் இருந்த போது மே மாதம் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பெற்றதை நினைவு கூரும் வகையில் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அரங்கம் மற்றும் சிலையை நேற்று இந்த மையத்தின் மேஜர் ஜெனரல் ரவீந்திர சிங் திறந்து வைத்தார்