ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய 4ஜி இணைய சேவை!

Scroll Down To Discover

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370ஆவது பிரிவை நீக்கி, இரு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலத்தை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு பிரித்தது.

அதைத் தொடர்ந்து வதந்திகள் பரவி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க மொபைல் இண்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் கலந்த விமர்சனங்கள் இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன.மேலும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தடுப்பு காவலில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.

அதேபோல், ஜம்மு காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு தடை செய்தது. அந்த தடையை அரசு நீக்கினாலும், ஜம்மு-காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மட்டுமே கொடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு 2ஜி சேவையும் கடந்த ஆகஸ்ட்டில் இரு மாவட்டங்களில் மட்டும் 4ஜி சேவை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மின்துறை முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் வெளியிட்டுள்ள தகவலில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் 4ஜி மொபைல் இண்டர்நெட் சேவை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்