சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது, பினாமி சொத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி கோரியபோது, அவர் கொரோனா சூழலை காரணம் காட்டி ஆஜராக மறுத்தார்.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தாங்களாக நேரடியாக சென்று விசாரிக்க தொடங்கினர்.நேற்று முன்தினம் (திங்களன்று) தொடர்ந்து 8 மணி நேரம் அவரது அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடந்தது. நேற்று 2–வது நாளாக விசாரணை தொடர்ந்தது.
இந்நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. உண்மை வெற்றி பெறும் என்று ராபர்ட் வதேரா கூறியுள்ளார். பினாமி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பலமுறை கேட்ட போதும் கொரோனா விவகாரத்தால் தம்மால் விசாரணையில் இணைய முடியவில்லை என்று அவர் கூறியதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையாக ராபர்ட் வதேராவின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று அவரது வாக்குமூலத்தைப் பெற்றனர்.
லண்டனில் ராபர்ட் வதேராவுக்கு சில சொத்துகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கணக்கில் காட்டப்படாத இந்த சொத்துகள் குறித்து வருமான வரித்துறை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
Leave your comments here...