மகாராஷ்டிரா மாநில பாஜக பொதுச்செயலாளராக ராஜா உடையார் நியமனம்

Scroll Down To Discover
Spread the love

மகாராஷ்டிரா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தென்னிந்திய பிரிவு மாநில பொதுச் செயலாளராக ராஜா உடையாரை நியமித்துள்ளனர்.

கொரோனா காலக்கட்டத்தில் மகாராஷ்டிரா, கர்நாடக, தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள மாணவ/மாணவிகள், வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் வெளிநாடுகளில் இறந்தவர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு வந்து ஒப்படைப்பது போன்ற மக்களுக்கு பல சேவைகள் செய்து வருகின்றார்.

ஆதலால் பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு மும்பை தலைவராக இருந்த ராஜா உடையார் அவர்களை முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரகாந்த் தாதா பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிரித்சோமையா, வடகிழக்கு மும்பை பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் கோட்டக், மகாராஷ்டிரா மாநில துணைத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரசாத் லாட், பாஜக மராட்டிய மாநில தென்னிந்திய பிரிவு தலைவர் ராஜேஷ் பிள்ளை, முன்னாள் மகாராஷ்டிரா மாநில வீட்டுவசதி வாரியம் தலைவர் சஞ்சய் உபாதையா, மும்பை பாஜக பிரமுகர் வினாயக் காமத் ஆகியோர் ராஜா உடையார் செய்த சேவைகளை கருத்தில் கொண்டு மேற்படி தலைவர்களின் ஆலோசனை படி ஒருமனதாக ராஜா உடையார் அவர்களை மாநில பொதுச்செயலாளராக நியமித்துள்ளனர். சிறந்த சமூக சேவகரான ராஜா உடையார் கட்சி தலைமை வைத்துள்ள நம்பிக்கையினால் மாநில பொதுச் செயலாளராக நியமித்துள்ளனர் .