மதுரை சோழவந்தானில் விவசாய சேவை மையத்தை பாராட்டிய பாஜக தேசியத் துணைத் தலைவர்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய சேவை மையம் இயங்கி வருகிறது.

இதுகுறித்து கேள்விப்பட்ட பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், மகாராஷ்ரா ராஜ்சபா உறுப்பினருமான வினாய் எம்.பி. சோழவந்தான் வந்திருந்து இங்குள்ள விவசாய சேவை மையத்தை பார்வையிட்ட பின் மையத்தை நடத்தி வரும் பாஜக விவசாய அணி மாநில துணை செயலாளர் மணி முத்தையா அவர்களை பாராட்டினார். இதில் பாஜக மாநிலச் பொது செயலாளர் ஸ்ரீனிவாசன், விவசாய அணி மாநிலச் செயலாளர் மணி முத்தையா, மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் விவசாய சேவை மையத்தின் செயல்பாடு குறித்தும் விவசாயிகள் பயன் குறித்தும் விளக்கி பேசினர். தொடர்ந்து எம்.பி. ஸ்ரீ வினய் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியின் பார்மர் சேவா சென்டர் செயல்படுவது குறித்து நேரில் கேட்டறிந்தேன் மிகவும் விவசாயிகளுக்கு பயன்படக்கூடியவகையில் நன்றாக உள்ளது.

இது போல் விவசாயிகள் பயன்படும் வகையில் 100 மணி முத்தையாக்கள் உருவாகவேண்டும். வாஜ்பாயின் பிறந்த நாளன்று விவசாயிகளுக்கான சேவை மையத்தை பாரவையிட்டதனால் அவருக்கு மரியாதை செய்வதாக பெருமையடைகிறேன். மேலும் விவசாய சேவை மையங்கள் தவிர, பட்டியலினத்தவர், சிறுபான்மையினர்,மற்றும் மகளிர் நலன்காக்க சேவை மையங்கள் தொடங்கவேண்டும் . முன்னதாக பாஜகவினர் தேசியத் துணைத் தலைவர் வினய் மற்றும் நிர்வாகிகளை வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தனர்.