மதுரை மாவட்டம் மேலூர் செக்போஸ்ட் பகுதியில் குடிமைப்பொருள் என்ற அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட லாரியில் வெட்டப்பட்ட வாகை மரங்கள் 20க்கும் மேல் ஏற்றிச் செல்வதைக் கண்ட சமூக ஆர்வலரான ரவி மற்றும் அவரது நண்பர்கள் லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்தனர்,
அப்போது பூஞ்சுத்தி பகுதியில் இருந்து மரங்கள் வெட்டப்பட்டு தூத்துக்குடி பகுதிக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தார்,
மேலும் இதுகுறித்து அவர்கள் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில், வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில். மரங்கள் அனைத்தும் உரிய அனுமதி பெறாமல் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதை அறிந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் …
Leave your comments here...