மிஷன் சாகர் : உணவுப் பொருட்களுடன் ஜைபூடி நாடு சென்றது ஐஎன்எஸ் ஐராவத் போர்க்கப்பல்

Scroll Down To Discover

மிஷன் சாகர் இரண்டாம் திட்டத்தின் கீழ், 2020, நவம்பர் 10-ஆம் தேதி இந்திய போர்க் கப்பலான ஐராவத், ஜைபூடி துறைமுகத்திற்குள் நுழைந்தது.

இயற்கை பேரிடர்கள் மற்றும் கொவிட்-19 தொற்று பரவலால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு, நட்பு அயல் நாடுகளுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது.

இதன் அடிப்படையில் இந்திய போர்க் கப்பலான ஐராவத், ஜைபூடி நாட்டில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் உணவு பொருட்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளது.
https://twitter.com/SpokespersonMoD/status/1326818890748317697?s=20
நவம்பர் 11-ஆம் தேதி ஜைபூடி நாட்டின் சமூக விவகாரத் துறை அமைச்சர் திருமிகு இஃப்ரா அலி அகமதிடம் ஜைபூடி நாட்டுக்கான இந்திய தூதர் திரு அசோக் குமார், உணவுப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் ஐராவத் போர்க் கப்பலின் தலைமை அதிகாரி கமாண்டர் பிரசன்ன குமார் கலந்து கொண்டார்.