அலங்காநல்லூரில் முக்குலத்தோர் சமுதாயம் சார்பில் சாலை மறியல்

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தேவர் சமுதாய கொடி கம்பத்தை சமூகவிரோதிகள் இரவோடு இரவாக அகற்றியதை கண்டித்து திடீர் சாலை மறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்கு எஸ்.கே.சதீஷ் தலைமை தாங்கினார்.

பசும்பொன் தேசிய கழகம், தென்னிந்திய பார்வர்ட் பிளாக், மறத்தமிழர் சேனை, முக்குலத்தோர் எழுச்சி கழகம், அனைத்து முக்குலத்தோர் சமுதாயம் உட்பட பல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவர் சமுதாய கொடியை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதே இடத்தில் மீண்டும் கொடிகம்பம் வைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி கண்டன கோசமிட்டு சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக எழுதி காவல் நிலையத்தில் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அகற்றப்பட்ட கொடிமரத்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூலம் உடனடியாக மீண்டும் அதே இடத்தில் கொடி கம்பம் புதிதாக அமைக்கப்பட்டது. இதன் பின்னர் மறியலில் ஈடுபட்ட சுமார் 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.