பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22-தேதி வரை மீண்டும் ஊரடங்கு ..!

இந்தியா

பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22-தேதி வரை மீண்டும் ஊரடங்கு ..!

பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22-தேதி வரை மீண்டும் ஊரடங்கு ..!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பெங்களூருவில் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் கர்நாடகா 5வது இடத்தில் உள்ளது

இதுகுறித்து முதலமைச்சர் எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைத்த கருத்துகளின் அடிப்படையில், பெங்களூரு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாவட்டங்களில் ஜூலை 14ஆம் தேதி இரவு 8 மணி முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு பற்றிய விரிவான வழிகாட்டுதல்கள் திங்களன்று வெளியிடப்படும். பால், காய்கறிகள், பழங்கள், மருந்துகள், மளிகை ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது. கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, வழிமுறைகளை பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பெங்களூருவாசிகள் நேற்று கிடைத்த வாகனங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.இந்த ஊரடங்கின் போது அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கான கடைகள் காலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்

Leave your comments here...