போலி கல்வி சான்றிதழ் : தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது – கடத்தல் ராணி ஸ்வப்னா குறித்த என்ஐஏ திடக்கிடும் தகவல்..!

இந்தியா

போலி கல்வி சான்றிதழ் : தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது – கடத்தல் ராணி ஸ்வப்னா குறித்த என்ஐஏ திடக்கிடும் தகவல்..!

போலி கல்வி சான்றிதழ் :  தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது – கடத்தல் ராணி ஸ்வப்னா குறித்த என்ஐஏ  திடக்கிடும் தகவல்..!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியதாக, தூதரக மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் கைதானார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிகாரி ஸ்வப்னா கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று முன்தினம் பெங்களூருவில் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் நாயமாநில தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை முன்னாள் ஊழியரும் கைது செய்யப்பட்ட னர். இவர்கள் 3 பேர் மட்டுமின்றி எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஸ்வப்னாச உள்ளிட்டோரை காரிலேயே கேரளாவின் கொச்சிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஆலுவாவில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் கொரோனா பரிசோதனைக்காக அதற்கான மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடைய கூட்டாளி சந்தீப் நாயருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இருவருக்கும் பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநில தகவல் தொழில்நுட்ப துறையில், ஸ்வப்னா, பணிக்கு சேர்ந்தது எப்படி என்பது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்’ என்ற கன்சல்டன்சி நிறுவனத்தின் வாயிலாக, அவர், பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. ஸ்வப்னா அளித்த கல்வி சான்றிதழில், மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு பல்கலையில், பி.காம்., படித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பல்கலை அளித்ததாக கூறி, ஒரு சான்றிதழையும் அவர் கொடுத்துள்ளார்.

ஆனால், ‘அந்த சான்றிதழில் உள்ள கையெழுத்து, சீல் ஆகியவை போலியானவை. ஸ்வப்னா, எங்கள் பல்கலையில் படிக்கவில்லை’ என, அந்த பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அந்த கன்சல்டன்சி நிறுவனத்திடம் நடத்திய விசாரணையில், ஸ்வப்னா, அந்த பல்கலையில் படித்தாரா என்பதை உறுதி செய்யும் பணியை, வேறு ஒரு ஏஜென்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும், அந்த ஏஜென்சி அளித்த தகவல் அடிப்படையில் தான், ஸ்வப்னாவை பணிக்கு பரிந்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது என என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தங்கக் கடத்தல் குறித்த ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Leave your comments here...