மாநில அரசுக்கு உரிமை இல்லை – கேரளா பத்மநாப சுவாமி கோயில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஆன்மிகம்இந்தியா

மாநில அரசுக்கு உரிமை இல்லை – கேரளா பத்மநாப சுவாமி கோயில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

மாநில அரசுக்கு உரிமை இல்லை – கேரளா பத்மநாப சுவாமி கோயில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது   – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ள ரகசியஅறைகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் வெளி உலகுக்கு தெரிய வந்தது.இக்கோயிலை, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் மன்னர் குடும்பத்தினரின் குலதெய்வமாகக் கருதப்படுவதால் அந்த கோயில் நிர்வாகத்தை கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்குப்பின்பும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசமே இருந்தது. இந்நிலையில் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன, நகைகளைப் பராமரிப்பதிலும், நிதி நிர்வாகத்திலும் ஏரளமான முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்’ என, சுந்தரராஜன் என்பவர், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், கோவிலை அரசு நிர்வகிக்க வேண்டும் என 2011-ல் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கேரள ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதேநேரம், கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரலில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. தீர்ப்பு தேதி வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.திருவனந்தபுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க அரச குடும்பத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்தனர். மேலும், இடைக்காலமாக மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வாக குழு அமைக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. நிர்வாக குழுவில் அனைத்து உறுப்பினர்களும் இந்துகளாக இருக்க வேண்டும். பொக்கிஷங்கள் உள்ள 6-வது அறையை திறப்பது தொடர்பாக நிர்வாக குழு முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...