மாணவர்களுக்கு உதவ 4.60 கோடி புத்தகங்களுடன் தேசிய ‘டிஜிட்டல்’ நூலகம் – மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

இந்தியா

மாணவர்களுக்கு உதவ 4.60 கோடி புத்தகங்களுடன் தேசிய ‘டிஜிட்டல்’ நூலகம் – மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

மாணவர்களுக்கு உதவ  4.60 கோடி புத்தகங்களுடன் தேசிய ‘டிஜிட்டல்’ நூலகம் – மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பள்ளி-கல்லூரி திறப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில், மாணவர்களுக்கு உதவ அரசு ஒரு நூலகத்தை தயார் செய்துள்ளது. அதன் சிறப்பு என்னவென்றால், அதில் ஆரம்ப பாடம் முதல், சட்டம், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பாடங்களின் புத்தகங்கள் வரை அனைத்து பாடங்களுக்கான புத்தகங்களும் ஒரே இணைய மேடையில் கிடைக்கும்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்த தேசிய டிஜிட்டல் நூலகத்தில் (National digital library) 4.5 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகம் https://ndl.iitkgp.ac.in இணைப்பில் காணப்படும்.

இந்த நூலகம் நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கானது என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். இந்த போர்டல் ஆரம்ப கல்வி முதல் முதுகலை வரை அனைத்து பாடங்களையும் உள்ளடக்கியது. உதாரணமாக, இது சமூக அறிவியல், இலக்கியம், சட்டம், மருத்துவம் போன்ற அனைத்து பாடங்களையும் உள்ளடக்கியது.தேசிய டிஜிட்டல் நூலகத்தில் பிராந்திய மொழிகளிலும் புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தில் இதுவரை 4 கோடி 60 லட்சம் புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநில மாணவர்களும் தங்கள் மொழியில் புத்தகத்தை இங்கே படிக்கலாம்.

Leave your comments here...