மேற்கு வங்கத்தில் பயங்கரம் : பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு..!

அரசியல்இந்தியா

மேற்கு வங்கத்தில் பயங்கரம் : பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு..!

மேற்கு வங்கத்தில் பயங்கரம் : பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய  நிலையில் மீட்பு..!

மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக, 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் ஆதிக்கத்தை தகர்த்து ஆட்சியை பிடித்தவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய்.

இன்று காலை அவரது வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தேபேந்திர நாத் ராய் கொலை செய்த பின்னரே தூக்கிலிடப்பட்டார் என்று எம்.எல்.ஏ.வின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து பாஜக தேசிய தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தது உள்ளார்:-


பாஜக எம்எல்ஏ படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது மம்தா பானர்ஜி அரசின் சட்டம் ஒழுங்கின் தோல்வி பற்றி பேசுகிறது. எதிர்காலத்தில் இதேபோல் ஒரு அரசாங்கத்தை மன்னிக்கமாட்டர்கள் . இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் ட்வீட் செய்துள்ளார்.

Leave your comments here...