ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு ; அரசு கட்டுப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை..!

தமிழகம்

ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு ; அரசு கட்டுப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை..!

ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு ; அரசு கட்டுப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை..!

ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து வருவதால் தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அரசிற்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கொரோனா தொற்றின் வீரியத்தை குறைக்கும் விதமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது . பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிவதை தடுக்கும் விதமாகவும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் விதமாகவும் காய்கறி, பால்கள், மருந்து கடைகள், உணவகங்கள் மட்டும் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களுக்கு இரவு 8 மணி வரையிலும், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடைகளுக்கு மதியம் 2 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னையின் பிரதான சாலைகள் அனைத்திலும் காய்கறிகள் வீட்டிற்கு கிடைக்கும் வண்ணம் தெருக்களில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரத்து குறைவு மற்றும் திருமழிசையில் சென்று வாங்கி வருவதன் காரணமாகவும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தக்காளி கிலோ ரூ.50க்கும், சின்ன வெங்காயம் முதல் தரம் ரூ.70, இரண்டாம் தரம் ரூ.40, பல்லாரி வெங்காயம் ரூ.30-40, இஞ்சி ரூ.100, அவரைக்காய் ரூ.70, பீன்ஸ் ரூ.100, முள்ளங்கி ரூ.40, பாகற்காய் ரூ.40, மிளகாய் ரூ.100, புடலங்காய் ரூ.30, கொத்தமல்லி கட்டு ரூ.40, புதினா கட்டு ரூ.20 என விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கும் தமிழக அரசு விதித்துள்ளதால், காய்கறிகளை மட்டும் பயன்படுத்தி சமைத்து சாப்பிட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை பயன்படுத்தி கொண்டு தற்காலிக விலை ஏற்றத்தை வியாபாரிகள் செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வருவாயின்றி, வேலையின்றி மக்கள் தவித்து வந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் ஊரடங்கு ஒரளவுக்கு தளர்த்தப்பட்டதன் காரணமாக மக்கள் வேலைக்களுக்கு சென்று திரும்ப வந்த நிலையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களை 2 ஆயிரத்தை தாண்டி வருவதால், கடந்த 19-ம் தேதி முதல் 12 நாட்கள் ஊரடங்கை தமிழக அரசு அமுல்படுத்தியுள்ளதால், மீண்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது கையில் வைத்திருக்கும் சொற்ப பணத்தை வைத்து கொண்டு ஊரடங்கு நாட்களை கடத்தி விடலாம் என மக்கள் எண்ணி கொண்டிருக்கும் வேளையில், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மக்களை இந்த அச்சத்தில் இருந்து காக்கும் பொருட்டு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்துவதோடு, கண்காணிப்பு குழு அமைத்து பொருட்கள் விலை அதிகரித்து விற்கும் வியாபாரிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு விலைஉயர்வை கட்டுபடுத்த வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave your comments here...