இந்தியா சீன மோதல் : ரூ.5ஆயிரம் கோடி மதிப்பிலான சீன ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு : உத்தவ் தாக்கரே அதிரடி…!

இந்தியா

இந்தியா சீன மோதல் : ரூ.5ஆயிரம் கோடி மதிப்பிலான சீன ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு : உத்தவ் தாக்கரே அதிரடி…!

இந்தியா சீன மோதல் : ரூ.5ஆயிரம் கோடி மதிப்பிலான சீன ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு : உத்தவ் தாக்கரே அதிரடி…!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என அறைகூவல் விடுக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது.சீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிவு செய்துள்ளன. மேலும், உ.பி மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

லடாக் சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘அமைதியை விரும்புவதால், இந்தியாவை பலவீனமான நாடாக எண்ணக்கூடாது. சீனா துரோக மனப்பான்மை கொண்டது; இந்தியா இயல்பாகவே மனவலிமை கொண்டது’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் 2.0 என்ற முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் சீனா நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்கள் கைய்யெழுத்தானது. இந்த நிலையில் எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களை தொடர்ந்து இந்த 3 ஒப்பந்தங்களை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.புனே தாலே காவில் கிரேட் வால் மோட்டார்ஸ் என்ற நிறுவனத் து டன் ஆட்டோ மொபைல் தொழிற் சாலை தொடங்க ரூ.3 ஆயி ரத்து 770 கோடிக்கும், போடான் நிறுவனத்துடன் ரூ.1,000 கோடிக்கும், மற்றொரு நிறுவனத்துடன் ரூ.250 கோடி அளவிலும் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் லடாக் எல்லை பிரச்சினையில் சீனா மோதல் காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இதனால் சீன நாட்டு பொருட்களை வாங்க வேண்டாம் என்ற கோஷம் நாடு முழுவதும் எழுந்து உள்ளது.

இது குறித்து மராட்டிய தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறியதாவது:- சீன நிறுவனங்களுடன் அதிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என்று வெளி விவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி, அதன் வழிகாட்டுதலின் பேரில், சீன திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக மஹாராஷ்டிர தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...